அவிநாசி மேம்பாலத்தில்.. இறங்கலாம்! ஏறுதள கட்டுமானம் துவக்கம்…
கோவை – அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டும் மேம்பாலத்தில், ‘சிட்ரா’ அருகில், ஏறு தளம் அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் முருகேசன் நேற்று துவக்கி வைத்தார், ஏறுதளம், இறங்கு தளம் அமைக்க தேவையான நிலம் கையகப்படுத்தி, பணிகளை விரைவுபடுத்தவும், தரமாக மேற்கொள்ளவும் தலைமை பொறியாளர் அறிவுறுத்தினார். ஏனெனில், நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, 7 பேர் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை தரப்பில் கோர்ட்டில் வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டு, இரு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.