பெண் ‘பைலட்’களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்: சிந்தியா..
“நம் நாட்டில் 15 சதவீதமாக உள்ள பெண் ‘பைலட்’களின் எண்ணிக்கையை, 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்,” என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். பெண்களுக்கு ஏற்ற வேலை செய்யும் சூழலை, நம் விமான நிறுவனங்கள் அமைத்து தருகின்றன. மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல சலுகைகளை பெண்கள் பெறுகின்றனர். எனினும், நாம் அதையும் தாண்டி யோசிக்க வேண்டும். ஆண்களுக்கு மகப்பேறு விடுப்பு தருவது குறித்தும் சிந்திக்க வேண்டியது அவசியம்.குழந்தையை வளர்ப்பதில் ஆண்களுக்கும் சம பங்கு உள்ளது. நான் சம உரிமை குறித்து பேசவில்லை; சம பங்கு குறித்து பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.