அங்கன்வாடி மையம்-ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு!!!
நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் களின் பணி சிறப்பாக நடைபெற்று வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மோகனூர் தாலுக்கா பாலப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்கும் வகையிலான விளையாட்டு பொருட்களை பயன்படுத்தி கல்வி கற்பிக்கப் படுவதை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் அமர்ந்து கலந்துரையாடினார். மேலும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்ட உணவினை உண்டு ருசியை ஆய்வு செய்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்