ஜெனரேட்டர் வாங்கி வையுங்கள்: அண்ணாமலை எச்சரிக்கை!!
தமிழகத்தில் இனி அடிக்கடி மின்வெட்டு வரலாம் என்றும், இதனால் மக்கள் வீடுகளில் ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 16) செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்பதை நான் ஏற்கமாட்டேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார். இது திமுக.,விற்கோ, அவர்களின் பணிக்காகவோ அனுப்பி வைப்பதாக கவர்னர் சொல்லவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா