போலீசார் கட்டாயம் மருத்துவ பரிசோதனை
சமீபத்தில் டில்லியில் 231 பேர் பல்வேறு பிரச்னைகள் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் அனைவருக்கு மருத்துவ பரிசோதனை மிக அவசியமாகிறது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட போலீசார் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்தே ஆக வேண்டும் எனவும் இது முன்கூட்டியே நோய் தொடர்பான தகவல்களை பெற்று சீர் செய்து கொள்ள முடியும். இது மேலும் உயிர்ப்பலியை குறைக்க உதவும்.
ஏற்கனவே போலீஸ் குடியிருப்புகளில் ஆங்கில மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் போலீசார் மற்றும் போலீஸ் குடும்பத்தினர் 11,700 பலன் பெற்றுள்ளனர்.
கொரோனா காலத்தில் போலீசார் அனைவரும் சிறப்பாக பணியாற்றினர். இவர்களை பாராட்டும் வகையில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.