5ம் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி
கேரளா: வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்கள் ,வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:மாநிலத்தில் வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50 சதவீத அளவிற்கு பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரங்குகளில் நடத்தப்படும் கூட்டங்களில் 100 பேர் வரையிலும் வெளியே நிகழ்ச்சி நடத்தினால் 200 பேர் வரையிலும் பங்கேற்கலாம்.