அன்றாட உணவில் பீன்ஸ் அடிக்கடி எடுத்துக்கொள்ளவேண்டும் தெரியுமா….
உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித்தரும் பீன்ஸ். பீன்ஸ் வேகவைத்த நீரில் முகத்தை கழுவும் பொழுது முகம் பளபளக்கும்.
நீரிழிவு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சக்தி பீன்ஸ்க்கு உண்டு. மேலும் தொண்டைப்புண், இருமல் மற்றும் கைகால் நடுக்கத்தை கட்டுப்படுத்தும்.
இதயஅடைப்பு மற்றும் தேவை இல்லாமல் ரத்த நாளங்களில் சேரும் கொழுப்பை கரைக்கவும் பீன்ஸ் உதவுகிறது.
பீன்ஸ் காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள அது இரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
மாமிசம் மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை சீரணிக்க செரிமான உறுப்புகள் அதிகம் வேலை செய்கின்றன. அதற்கு நார்சத்து அதிகமுள்ள பீன்ஸ் அடிக்கடி எடுத்துக் கொண்டால் செரிமான உறுப்புகளை பாதுகாக்கும்.
பீன்ஸ் ரத்த ஓட்டத்தை சீராக்கி உடம்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி புரிகிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைபட்ட நீக்கி ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.