உடலிற்கு பல நன்மைகளை வாரிவழங்கும் வெந்நீர் !!
காலையில் எழுந்த பிறகு லேசான சூடான நீரை குடிக்கலாம். வெந்நீரை தினமும் சில வேளைகளில் குடித்து வரும் பட்சத்தில் நமது உடலிற்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.
வெந்நீர் பருகுவதால் உடலில் ரத்தஓட்டம் சீராகும். இதன் மூலம் நரம்பு மண்டலங்களின் செயல்பாடு மேம்படும். மேலும், வெந்நீர் அருந்துவது மூலம் உடலில் நச்சுகள் வெளியேறுவதால் வயதின் காரணமாக ஏற்படும் முதிர்ச்சி தள்ளிப்போடப்படும்.
அடிக்கடி வெந்நீர் குடித்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும். அதோடு முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி மேலும் முடி வளர்வதற்கு வழிவகுக்கும்.
இரவில் தூங்கும் போது வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் தூக்கத்தை கெடுக்கும். மேலும் இது உங்கள ரத்தநாள செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் மட்டும் வெதுவெதுப்பான நீரை அருந்தலாம்.
சூடான வெந்நீர் நமது உடம்பிற்குள் போகும்போது நமது உடலில் இருந்து வியர்வை வெளியாகும். அந்த வியர்வையில் நீர், உப்பு இது மாதிரியான கழிவுகள் உடலினை விட்டு வெளியேறி விடும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.