நோய் நீக்கி உடல் தேற்றியாக அஸ்வகந்தா !!!!
அஸ்வகந்தா என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை ஆகும். இதனுடைய இலை, வேர்கள் மற்றும் கிழங்கு மருத்துவ குணம் கொண்டது. இது வடமொழியில் அஸ்வகந்தா என்றும், தமிழில் அமுக்கிரா கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.அமுக்குரா கிழங்கு இலைகளை பூசும் போது இது உடலில் தோன்றும் கட்டிகளை அமுக்கும் வல்லமை கொண்டது. மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிறுகிளையும் உடைய 5 அடி வரை வளரக்கூடிய குறுஞ்செடிவகை இந்த அஸ்வகந்தா. கோவையிலும் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் தானே வளர்வது, கிழங்கு மருந்துவப் பயனுடையது. நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், பித்தநீர்ப் பெருக்கியாகவும், குடல் தாதுவெப்பு அகற்றியாகவும், பசி உண்டாகியாகவும், இச்சை பெருக்கியாகயாகவும் செயல்படும். அமுக்கரா கிழங்கில் உள்ள விதாபெரின் A என்ற உட்பொருள், இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை தடுக்கும் ஆற்றலைப் பெற்றது. சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. ஆரோக்கியமானவர்கள் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும் அமுக்கரா கிழங்கு பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் அமுக்கரா கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். இதய சம்பந்தமான நோய்களை குணப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு அஸ்வகந்தா பயன்படுகிறது. அஸ்வகந்தா அல்லது அமுக்கரா கிழங்கை அடிக்கடி அளவாக எடுத்துக் கொள்ளும்போது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்