இந்திய துாதர் பிரதீப் சீனாவில் பொறுப்பேற்பு!!
பீஜிங் : சீனாவுக்கான இந்திய துாதர் பிரதீப் குமார் ராவத், பீஜிங்கில் உள்ள துாதரகத்தில் நேற்று பொறுப்பேற்றார்.நம் அண்டை நாடான சீனாவின் இந்திய துாதராக இருந்த விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து 1990ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ்., அதிகாரியான பிரதீப் குமார் ராவத், சீன துாதராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், 4ம் தேதி சீனா சென்ற ராவத், கொரோனா விதிகள் காரணமாக தனிமையில் இருந்தார்.பின், நேற்று பீஜிங்கில் உள்ள இந்திய துாதரகத்தில் பொறுப்பேற்றார். இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே துாதராக பணியாற்றிய அனுபவம் உள்ள பிரதீப் குமார், சீன மொழியான மாண்டரினில் சரளமாக பேசும் திறன் வாய்ந்தவர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.