3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!!!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, மிதமான மழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த மூன்று நாட்களுக்கு, சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை முதல் மூன்று நாட்களும்; தேனியில் நாளையும், 18ம் தேதியும்; நீலகிரியில், 18ம் தேதியும் மிதமான மழை பெய்யும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.