கவர்னருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு!!!
தமிழக கவர்னர் ரவியை இன்று பிற்பகலில், முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக சட்டசபையில், நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு, கவர்னர் இன்னும் அனுப்பி வைக்கவில்லை.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று பிற்பகலில்கவர்னர் ரவியை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.