அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்த 2000 ஆண்டுக்கு முற்பட்ட செங்கல்!!!
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குட்டூர் செங்கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வாளர்கள் வளர்ச்சியடைந்த நாகரீகத்தின் அடையாளமாக செங்கல்லை கருதுகின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு அளவுள்ள செங்கல்லை பயன்படுத்தி உள்ளனர். சிந்து சமவெளி மக்கள் 1:2:4 என்ற விகிதாசாரத்தில் கன அகல நீளமுள்ள செங்கல்லை பயன்படுத்தினர். சங்ககால செங்கல் பொதுவாக 1:3:6 என்ற விகிதத்தில் இருக்கும். கீழடி சிறப்புக்கு அதன் செங்கல்லும் ஒரு முக்கிய காரணம். சங்ககால மக்கள் ஒரு நகர நாகரீகத்தை கொண்டிருந்தனர் என்பதை எடுத்துச் சொல்வதாக இந்த செங்கற்கள் அமைந்துள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி