நொய்யல் ஆற்றை மீட்க செயல் திட்டம் புதிய முயற்சி!!!

நொய்யலை அறிவியல்பூர்வ செயல்திட்டத்துடன் மீட்க, உலக இயற்கை நிதியம் கைகோர்க்கிறது. தன்னார்வ, தொழில் அமைப்பினர், அரசு துறைகளுடன் இணைந்து, இப்பணி மேற்கொள்ளப்பட அச்சாரமிடப்பட்டுள்ளது.உலக இயற்கை நிதியம் (டபிள்யூ.டபிள்யூ.எப்.,) சார்பில், நொய்யல் நதி பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு குறித்த கருத்தரங்கம், திருப்பூரில் நேற்று நடந்தது.  மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பேசுகையில், ”நொய்யலை மீட்கவேண்டும் என்பதுதான் அனைவரது கனவாக உள்ளது. தன்னார்வலர்கள், மக்கள் அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திலும், நொய்யல் மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.