காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை!!!
சமீபத்தில் வெளியான, ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் பார்க்க, போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக, மத்திய பிரதேச அரசு அறிவித்துஉள்ளது. மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் என்ற ஹிந்தி திரைப்படம், திரை அரங்குகளில் சமீபத்தில் வெளியானது. மத்திய பிரதேசத்தில் இத்திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இந்த படத்துக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும், இத்திரைப்படம் பார்க்க, போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும், மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.