ஆப்கானிஸ்தானில் 35 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு சிகிச்சை தேவை – உலக உணவு திட்ட அமைப்பு!

ஆப்கானிஸ்தானில் ஏறக்குறைய 35 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு சிகிச்சை தேவைப்படுவதாக கூறியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு (World Food Program) கூறியுள்ளது. மேலும் அந்த குழந்தைகளின் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு சர்வதேச உதவி நிறுவனங்கள் மூலம் ஊட்டச்சத்து சிகிச்சை வழங்குவதற்கு அணுகியுள்ளதாக தெரிவித்துள்ளது. 
முன்னதாக ஆப்கானிஸ்தானில் உள்ள 5-வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிபேர் 2022-ம் ஆண்டில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வார்கள் என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது ஆப்கானிஸ்தானில் அம்மை நோய் பரவி வருகிறது. அதிலும் பெரும்பாலும் குழந்தைகளே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மக்களின் இடப்பெயர்வு, வேலையின்மை, மோதல்கள் மற்றும் அரசியல் மாற்றம் ஆகியவை ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கான மக்களை இந்த கொடிய வறுமைக்கு நேராக கொண்டு சென்றுள்ளது. 
பல தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் மக்கள் இத்தகைய மோசமான சூழ்நிலையை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ முன்வருமாறு உலகிற்கு சர்வதேச உதவி நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.