அனுமதியின்றி கனிம வளம் உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…
கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி கூட்டம் பாலூரில் வைத்து ஒன்றிய தலைவர் மாங்கரை மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.கங்காதரன் கூட்டத்தை வழி நடத்தினார். கூட்டத்தில் கிள்ளியூர் ஒன்றிய பகுதிகளில் அனு மதியின்றி கனிம வளம் (பாறை) உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்பது, ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு அனுமதி பெற்றுவிட்டு திடீரென ஜெபக்கூட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்பது, கட்டாய மதமாற்ற சட்டத்தை உடனடி நடைமுறைப்படுத்த கேட்பது, குழித் துறையில் மூடப்பட்டுள்ள திருக்கோவில்கள் கண்காணிப்பு அலுவலகத்தை திறந்து செயல்பட வைக்க அரசை வலியுறுத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.