திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் ஜெயக்குமார்…

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கன்டோன்மென்ட் (சட்டம்- ஒழுங்கு) காவல் நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டார். நிபந்தனை ஜாமீன்படி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திருச்சியில் 2 வாரங்கள் தங்கி இருக்க வேண்டும். திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் திங்கள், செவ்வாய், புதன் என வாரத்தில் 3 நாட்கள் வீதம் 2 வாரங்களுக்கு நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திடுவார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.