800 மாணவர்களை மீட்டு வந்த 24 வயது பெண் பைலட்!!!
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கி தவித்த 800 மாணவர்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் 6 விமானங்களை இயக்கி மீட்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார் 24 வயதே ஆன பெண் பைலட் மகாஸ்வேதா சக்ரவர்த்தி. அவரது பணியை சமூக ஊடகங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் அமேதியில் உள்ள விமானிகளுக்கான பயிற்சி நிறுவனமான இந்திரா காந்தி ராஷ்டிரிய உரான் அகாடமியில் மகாஸ்வேதா பட்டம் பெற்றவர். பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் திட்டமான வந்தே பாரத் திட்டத்திலும் இவரது பங்களிப்பு இருந்தது. 2ம் அலையின் போது ஆக்சிஜன் செறிவூட்டிகளை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வந்துள்ளார். தடுப்பூசிகளை புனேவிலிருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு விமானம் மூலம் கொண்டு சென்றுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.