வடபழநி ஆண்டவர் கோவிலில் மஹா கும்பாபிஷேகத்தை அடுத்து, சத கலசாபிஷேகத்துடன், மண்டலாபிஷேக பூஜை நேற்று நிறைவடைந்தது. சென்னை வடபழநி ஆண்டவர் முருகன் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் முடிக்கப்பட்டு, ஜன., 23ம் தேதி, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து நடந்த மண்டலாபிஷேகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கான பூர்த்தி பூஜைகள் கோவிலில் சிறப்பாக நடைபெற்றன. இதை முன்னிட்டு, முதல் கால பூஜை நேற்று முன்தினம் மாலை ஆரம்பமானது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்
