தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை அமல்: பாலகுருசாமி பாராட்டு..
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை, தமிழக அரசு படிப்படியாக அமல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது’ என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்து உள்ளார். திறன் சார்ந்த கல்வியும், பயிற்சியும் பாட திட்டத்தில் கட்டாயமாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது, மாணவர்கள் தொழில் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கைகள், கல்வியாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளன. ‘இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள், இளம் மாணவர்கள் கல்வியில் முன்னேற வழி வகுக்கும் திட்டங்கள். இந்த திட்டங்கள் எல்லாம், புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள். புதிய கல்வி கொள்கையை எதிர்த்தாலும், மறைமுகமாக அவற்றில் உள்ள முக்கிய பரிந்துரைகளை, தமிழக அரசு அமல்படுத்தி வருவது மிகச் சிறந்த நடவடிக்கை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.