காசிமேடில் வரத்து குறைவு: மீன் விலை சற்று உயர்வு!!!
சென்னை காசிமேடில் மீன் வரத்து குறைவாக இருந்ததால், மீன் விலை சற்று உயர்ந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் காசிமேடு துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன் பிரியர்களால் காசிமேடு களைகட்டியது. வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்று திரும்பி வந்த நிலையில், நேற்று 40க்கும் குறைவான விசைப்படகுகளே, மீன்பிடிக்க சென்று திரும்பின.மீன் வரத்து குறைந்ததையடுத்து, மீன் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. மேலும், கவலா, நவரா, சங்கரா உள்ளிட்ட சிறிய ரக மீன்கள் அதிகமாக விற்பனைக்கு வந்தன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்