பாலாற்றில் இருந்து காஞ்சி வரும் குடிநீர் மாயம்: 50 லட்சம் லி எங்கே???
காஞ்சிபுரம் ; திருப்பாற்கடல் பாலாற்றில் இருந்து காஞ்சிபுரம் வரும் 65 லட்சம் லிட்டர் குடிநீரில், 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக செல்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ”உடைப்பு ஏற்பட்ட பகுதியை கண்டு பிடித்து தண்ணீர் வீணாவதை சீரமைக்கும் பணி இன்று நடக்க இருப்பதாக,” மேயர் மகாலட்சுமி தெரிவித்தார்.காஞ்சிபுரம் நகர் மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ராணிப்பேட்டை மாவட்டம், திருப்பாற்கடல் பாலாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கான திட்டப்பணி 1989ல் துவங்கி, 1992ல் நிறைவு பெற்று குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.குடிநீர் பைப் வாயிலாக தண்ணீர் கொண்டு வந்து சாலபோகம் நீரேற்று நிலையத்தில் தேக்கப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்