வரலாற்றில் இன்று

1567 : நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் 80 ஆண்டுப் போர் ஆரம்பமானது.

1781 : வில்லியம் ஹெர்ஷல் என்பவரால் யுரேனஸ் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1881 : ரஷ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் அரண்மனைக்கு அருகில் அவர் மீது குண்டு வீசப்பட்டுக் கொல்லப் பட்டார்.

1897 : சான்டியாகோ மாநிலப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

1900 : பிரான்ஸில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

1908 : திருநெல்வேலியில் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த வ.உ.சி, சுப்ரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் கைது செய்யப்பட்டதால் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதில் ஆங்கிலேயர்களின் குண்டுக்கு 4 பேர் பலியானார்கள்.

1921 : மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

1935 : பிரிட்டனில் ஓட்டுநர் சோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1940 : இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம்சிங், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான மைக்கேல் டயர் என்பவரை லண்டனில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் சுட்டுக்கொன்றார்.

1943 : ஜெர்மனிப் படையினர் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்

1962 : யூகோஸ்லோவியா ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியது.

1973 : சிரியா அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது.

1979 : கிரெனடாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1988 : உலகின் மிக நீளமான கடலடிச் சுரங்கம் செய்க்கான் சுரங்கம் ஜப்பானில் திறக்கப்பட்டது.

1992 : கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 6.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் 498 பேர் உயிரிழந்தனர்.

80 ஆண்டுகளாக வெளிவந்த ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் பத்திரிக்கை பிராவ்தா வருமானம் இல்லாததால் நிறுத்தப்பட்டது.

2012 : என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின் அச்சிடப்பட்ட பதிப்புகளை இனி வெளியிடாது என்று அறிவித்தது.

பங்களாதேஷ், டாக்கா அருகே எண்ணெய் டேங்கர் மீது படகு மோதியதில் 173 பேர் உயிரிழந்தனர்.

2016 : துருக்கி, அங்காராவின் மத்தியப் பகுதியில் குண்டு வெடிப்பு இடம்பெற்றதில் 37 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.