சென்னை அண்ணா மேம்பாலம் ரூ.9 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது…
அண்ணா மேம்பாலம் புதுப்பிக்கப்படுவதையொட்டி மேம்பால சந்திப்பில் கதீட்ரல் ரோடு செல்லும் பகுதியில் பல்லவர் கால பாணியில் செதுக்கப்பட்ட 6 அடி உயர சிங்கம் சிலை அழகிய வடிவமைப்புடன் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம் என்ற பெருமையை பெற்ற அண்ணா மேம்பாலம் இந்திய அளவில் கட்டப்பட்ட 3-வது பெரிய மேம்பாலமாக அப்போது திகழ்ந்தது.மேம்பாலத்திற்கு அருகே நீண்ட காலமாக ஜெமினி ஸ்டூடியோ அமைந்திருந்ததால் ஜெமினி மேம்பாலம் என்றும் அழைப்பது வழக்கம். அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டு தொடங்குவதையொட்டி மேம்பாலத்தை அழகுபடுத்தி புதுப்பிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை