சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி…

மயிலாடுதுறை மாவட்டம் டி.மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட நட்சத்திரமாலை கிராமத்தில் குரங்குகள், வீடுகளில் இருக்கும் அரிசி, காய்கறி, பழவகைகளை தின்பதுடன் அவற்றை சிதறி சேதப்படுத்திவிட்டு செல்கிறது. அதை விரட்டினால் அவை கடிக்க வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே அந்த பகுதியில் அதிக அளவில் சுற்றித்திரியும் குரங்குகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published.