வெளிப்படையான தீவிரவாதம்!!!
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், “தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் இருந்து மக்கள் வெளியேற ரஷ்ய ராணுவம் அனுமதி மறுக்கிறது. மரியுபோல் நகரை பிணையாக பிடித்து வைத்திருக்கவும் அதன் மீது குண்டுமழை பொழியவும் இடைவிடாது தாக்குதல் நடத்தவும் ரஷ்ய படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் செல்வதற்கான மனித நேய பாதை அருகே பீரங்கி தாக்குதல் நடத்தப்படுகிறது. ரஷ்ய ராணுவத்தினரின் இந்த நடவடிக்கை அப்பட்டமான தீவிரவாதமாகும்,’’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.