அமெரிக்காவில் காரை ஏற்றி இந்திய டாக்டர் படுகொலை!
அமெரிக்காவில் மேரிலேண்டில் உள்ள சில்வர் ஸ்பிரிங் பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி மருத்துவரான ராகேஷ் படேல், வாஷிங்டனில் உள்ள மெட்ஸ்டார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த புதன்கிழமையன்று காதலிக்கு வாங்கிய பரிசை அளிக்க தனது காரில் சென்றார். அங்கு அவர் காரை விட்டு இறங்கி காதலியை நோக்கி நடந்த போது, இதுதான் தருணம் என்று காத்திருந்த கார் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அவரது காரில் ஏறி புறப்பட்டனர். தனது கார் கடத்தப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகேஷ், காரை வழிமறித்து நின்றார். அப்போது, கடத்தல் கும்பலினர் காரை அவர் மீது ஏற்றி சென்றனர். இதில், தனது காதலியின் கண் முன், மருத்துவர் ராகேஷ் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான கார் கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.