பாஜ.வின் பாதி பொய் அழிக்கப்பட்டு விட்டது!
உபி தேர்தல் குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கடந்த தேர்தலை விட பாஜ தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி கடந்த முறை பெற்ற தொகுதிகளை விட இரண்டரை மடங்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளது. வாக்கு வங்கியும் ஒன்றரை மடங்கு அதிகமாகி இருக்கிறது. இதற்காக மக்களுக்கு நன்றி. பாஜ.வின் இந்த சரிவு தொடரும், பாஜ.வின் பாதிக்கும் மேற்பட்ட பொய்கள் அழிக்கப்பட்டுள்ளன,’ என்று கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.