சர்தாம் திட்ட குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிக்ரி நியமனம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனித தலங்களை இணைக்கும் வகையிலும், எல்லைப் பகுதியில் சாலை வசதியை மேம்படுத்தும் வகையிலும், கடந்த 2016ம் ஆண்டு சார்தாம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான உச்ச நீதிமன்றத்தன்  உயர்மட்டக்குழு தலைவராக பேராசிரியர் ரவி சோப்ரா கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த குழுவில் இருந்து விலகுவதாக கடந்த ஜனவரியில் ரவி சோப்ரா உச்ச நீதிமன்ற அமர்வுக்கு கடிதம் எழுதினார். நீதிபதிகள் சந்திராசூட், சூர்யாகாந்த் ஆகியோர் பேராசிரியர் ரவியின் ராஜினாமா  கடிதத்தை ஏற்றுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து, சார்தாம் திட்டத்திற்கான உயர்மட்ட குழுவின் தலைவராக ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதபதி சிக்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திட்டத்தின் சுற்றுச்சூழல் விவகாரம் மற்றும் திட்டம் தொடர்பான பிற சிக்கல்களை கவனித்து வரும் கண்காணிப்பு குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.