காங். தலைமையில் ஒன்றிணைய தயார்!!!!
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் ஏற்கனவே ஆட்சி செய்த 4 மாநிலங்களில் பாஜ மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதுவே, 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இத்தனை நாட்களாக காங்கிரஸ் தலைமை வேண்டாம் என்று முரண்டு பிடித்து வந்த மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஒருபடி கீழே இறங்கியுள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் விரும்பினால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்கலாம். தற்போது நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் 2024ல் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை,’’ என்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.