மாநகராட்சியில் 22 புதிய மருத்துவமனைகள்… பட்ஜெடகூட்டத்தில் வெளியாகிறது அறிவிப்பு!!!

சென்னை மாநகராட்சியில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மக்கள் தொகை அடிப்படையில், 162 மருத்துவமனைகள் தேவைப்படுகிறது. அதனால் மத்திய அரசு நிதியின் கீழ், சென்னை மாநகராட்சியில் கூடுதலாக 22 மருத்துவமனைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளின் அமைவிடம், திட்ட மதிப்பீடு போன்றவை தயார் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.