பேடிஎம் பெமென்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை!!!

பேடிஎம் பேமன்ட் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணைய வழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் சேவையை தனியார் நிறுவனங்கள் முதல் டீ கடைகள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பேடிஎம் பேமன்ட் பேங்க், என்ற புது சேவையை பேடிஎம் துவக்கியுள்ளது. இந்நிலையில், பேடிஎம் பேமென்ட் பேங்க், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. 1949-ம் ஆண்டு வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பண பரிவர்த்தனை தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் முறையாக வங்கி பின்பற்றாததாலும், வருமான வரி தணிக்கை ஆய்வறிக்கையின் அடிப்படையிலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை

Leave a Reply

Your email address will not be published.