தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் முன்னணி நாடாக உயரும்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு!
தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் முன்னணி நாடாக உயரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். அசாம் மாநில தலைநகர் கௌஹாத்தியில் தொழிலதிபர்களுடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு பட்ஜெட்டை போலவே இந்த ஆண்டு பட்ஜெட்டும் மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை முன்னணி நாடாக உயர்த்துவதற்கு பாடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், அதற்கு மின்னனு ரீதியாக இந்தியா தயாராகி வருவதாக கூறினார். நாட்டில் மின்னணு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி 75 டிஜிட்டல் வங்கிகள் அமைக்கப்படும் என தெரிவித்தார். அத்துடன் ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் பணம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.