தி.மு.க.,வினரால் ஆபத்து: பா.ம.க., கவுன்சிலர் அலறல்…
தஞ்சாவூர்: ஆடுதுறை பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலர், ‘எனக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும், தி.மு.க., – எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,தான் பொறுப்பு’ என முகநுால் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியின் 15 வார்டுகளில், தி.மு.க., கூட்டணி – 7, பா.ம.க., – 4, அ.தி.மு.க., – 2 சுயேச்சைகள் – 2 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தன. தலைவர் பதவி, தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு எட்டு கவுன்சிலர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், கடந்த 4ம் தேதி நடந்த மறைமுக தேர்தலுக்கு, தி.மு.க., கவுன்சிலர்கள் மூன்று பேர் தவிர 12 மட்டுமே வந்திருந்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.