பெண் எஸ்.ஐ., தற்கொலை முயற்சி!!!
பெரம்பலூர்: அரியலூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ., தற்கொலை முயற்சி ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருபவர் லட்சுமி பிரியா, 30, இவர் கடந்த 5ம் தேதி முதல் 3 நாள் விடுப்பு எடுத்துள்ளனர். இந்நிலையில் உயர் அதிகாரிகளிடம் விடுப்பு கூறாமல் சென்றுள்ளதால் அவரை திருச்சியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளிக்கு செல்ல அதிகாரிகள் கூறியதால் செடி கருகும் பூச்சு மருந்தை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு பணியில் இருந்த போது மயங்கி விழுந்துள்ளார். உயர் அதிகாரிகளின் டார்ச்சரால் பெண் எஸ்.ஐ தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை