கோவைக்கு தனி ரயில்வே கோட்டம்; ஓரணியில் திரளும் 175 அமைப்புகள்….
பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து சேலம் கோட்டம் பிரிக்கப்பட்ட பின்னும், கோவை மீதான புறக்கணிப்பு தொடர்வதால், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டம் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. கேரளாவில் புதிய கோட்டம் பிரிக்கக்கூடாது என்று எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின், 2007 நவ.,1ல் சேலம் ரயில்வே கோட்டம் உதயமானது.புதிய கோட்டம் துவக்கப்பட்டு, 14 ஆண்டுகள் கடந்த பின்னும், கோவை ரயில்வே ஸ்டேஷனில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்