முத்திரை தாள் தட்டுப்பாடு: கவனிக்குமா தமிழக அரசு???
திருப்பூர்: கோவை, திருப்பூர் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில், கடந்த சில மாதங்ளாக முத்திரை தாள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கடந்த, மூன்று மாதங்களாக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில், அதிகளவு மதிப்பிலான முத்திரை தாளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், 5,000 மதிப்புள்ள முத்திரை தாள்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக, அரசு சார்பில், முத்திரைதாள் அச்சடிக்கப்படுவதற்கு பணம் வழங்கப்படவில்லை என்றும், அதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, இது விஷயத்தில், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்