பஞ்சு விலை இரு மடங்கு உயர்வு!!!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் போகமாக பருத்தி, பயறுவகை, தாணியங்கள் சாகுபடி செய்ய வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்ற பஞ்சு தற்போது ரூ.60 முதல் ரூ.87 வரை விலை கிடைக்கிறது. பருத்தி சாகுபடியில் விவசாயிகள் பலர் ஈடுபட்டுள்ளனர்.வெளியூர்களிலிருந்து பருத்தி பஞ்சு வரத்து குறைந்துள்ளதால் ராமநாதபுரம் சந்தையில் பஞ்சு விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.87 வரை விலைபோகிறது. இனிவரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை