தளபதி மரணம் ரஷ்யாவுக்கு பின்னடைவா?.. 2 வாரங்கள் ஆகியும் உக்ரைனை வெல்ல முடியாத ரஷ்யா..!
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம் பல பகுதிகளை கைப்பற்றி, முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ் புறநகர் பகுதிகள், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், குடியிருப்பு கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் அனைத்தும் குண்டுவீச்சில் தரைமட்டமாகி உள்ளன. 6 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 4.1 கோடி மக்கள் தொகையும் உக்ரைனின் ராணுவத்தில் 2.45 லட்சம் முழுநேர வீரர்களும், 2.20 லட்சம் ரிசர்வ் வீரர்களும் உள்ளனர். 1.9 லட்சம் வீரர்களை ரஷ்ய ராணுவப்படை பிரிவு உக்ரைனை 3 திசைகளில் இருந்து படையெடுத்து 2 வாரங்களாக முயற்சித்து வருகிறது.
மார்ச் முதல் வாரத்தில் ரஷ்ய ராணுவப்படை வீரரின் துணை தளபதி மேஜர் ஆன்ட்ரி சுகோவெட்ஸ்கி போரில் உயிரிழந்ததாக வெளியான தகவல்களை ரஷ்ய ஊடகங்கள் உறுதி செய்தன. இந்நிலையில் கார்கிவ் நகரில் முற்றுகையில் ஈடுபட்டிருந்த மேஜர் ஜெனரல் விட்டாலி ஜெராசிமோவ் மற்றும் அவரின் சக அதிகாரிகள் பலரும் உக்ரைன் ராணுவத்தின் எதிர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 முக்கிய ராணுவ தளபதிகளை இழந்தும் இதுவரை ரஷ்ய ராணுவத்தினால் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்ற முடியவில்லை கார்கிவ், மைகோலைவ், செர்னிஹவ், சுமி, ஒடிசா, ஆகிய நகரங்களை முற்றுகையிட்டு கைப்பற்ற ரஷ்ய ராணுவம் போராடி வருகிறது.
அடுத்த 24 முதல் 96 மணி நேரத்தில் தலைநகர் கீவ் மீது கடும் தாக்குதல் நடத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக institute for water studies நிறுவனம் கூறியுள்ளது. போதுமான முன் திட்டமிடல் இல்லாததாலும் குறைந்த அளவிலான ராணுவ படைப்பிரிவுகளை பல்வேறு முனைகளை நோக்கி அனுப்பியதாலும் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை என்று இந்த ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கீதா.