பஸ், ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அட்டூழியம்!!!
அரசு பேருந்து மற்றும் ரயில்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள், ‘செல்பி’ மோகத்தில் ஆபத்தான வகையில் படிகளில் தொங்கியபடியும், கூரை மீது ஏறியும் பயணிப்பது அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பஸ், ரயில்களில் படியில் தொங்கியபடியும், ஏணி மற்றும் கூரையில் ஏறி நின்று பயணம் செய்கின்றனர். திருத்தணி – சிவாடா மற்றும் திருத்தணி – பொதட்டூர்பேட்டை ஆகிய மார்க்கத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் வாயிலாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் திருத்தணி நகருக்கு வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.