அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கும் மெட்ரோ நிர்வாகம்…
விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையேயான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, தமிழக அரசிடம் சென் னை மெட் ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.எனினும், திட்ட அறிக்கை சமர்ப்பித்து நீண்ட நாட்கள் ஆகியும், இதற்கு ஒப்புதல் வழங்குவது குறித்து அரசு இதுவரை எவ்வித அறிவிப்பையும் வெளியிடாதது மெட்ரோ ரயில் நிர்வாகம் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணியர் மற்றும் சென்னையிலிருந்து, வெளியூர் செல்லும் பயணியருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். பாதுகாப்பான, சுகாதாரமான குளுகுளு பயணம், திட்டமிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால், மேற்கண்ட பாதையில் மெட்ரோ ரயில் திட்டத்தை எதிர்பார்த்து பலரும் காத்திருக்கின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.