தனி தேர்வர் விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்…
சென்னை : அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள், இன்று முதல் மார்ச் 16 வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். இந்த கால அவகாசத்தில் விண்ணப்பிக்க தவறுவோர், தத்கல் சிறப்பு கட்டண திட்டத்தில், மார்ச் 18 முதல், 21 வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி