ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவை வழங்க பணம் இல்லை!!
கோவை: ”கோவை மாநகராட்சியில் புதிய கவுன்சில் பதவியேற்றுள்ள நிலையில், நிதி நிலைமை இன்னும் சீராகவில்லை,” என்கிறார், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால். ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் பணம் வழங்காதது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:. மாநகராட்சி நிதி நிலைமை இன்னும் சீராகவில்லை. தண்ணீர் சப்ளை மற்றும் இன்ஜினியரிங் பணிகளில், ஜன., வரையிலான பில்கள் ‘கிளியர்’ ஆகி விட்டன. சில பைல்கள், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கின்றன. அப்போது, ‘பேட்ச் ஒர்க்’ செய்யப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.