பணத்திற்காக மூதாட்டி கொலை பட்டதாரி வாலிபர் கைது!!!
கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே பணத்திற்காக மூதாட்டியை கத்தியால் வெட்டி கொலை செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த தகரை வடக்கு காட்டுகொட்டாய் பகுதியைச்சேர்ந்தவர் கந்தசாமி மனைவி பாப்பு,60; இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த நிலையில் மர்மமான முறையில் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை