கோகுல்ராஜ் வழக்கில் பிற்பகலில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும்: மதுரை சிறப்பு நீதிமன்றம்…
கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் பிற்பகலில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருக்கிறார். தண்டனை தொடர்பாக இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் பிற்பகலில் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. 106 சாட்சிகள், 500 ஆவணங்களை விசாரித்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.