போலந்து நாட்டிற்கு தஞ்சம் புக சாரை சாரையாக வரும் உக்ரைன் மக்கள்!!!

உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய நாள் முதல் அங்கு வசித்து வந்த வெளிநாட்டினர் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேற தொடங்கினர். 
இந்த நிலையில் 10 ஆயிரம் இந்தியர்கள் உள்பட 1 லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டினர் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற உதவியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பிப்ரவரி 24 அன்று ரஷிய படைகள் உக்ரைனுக்குள் நுழைந்ததில் இருந்து  தங்கள் நாட்டிற்குள் நுழைந்த மக்களின் எண்ணிக்கை 10 லட்சட்சத்தை தாண்டியுள்ளதாக போலந்து எல்லைக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி வரும் உக்ரைனியர்களை தங்க வைக்க போலந்தில் தற்காலிக தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரஷியாவின் வெடிகுண்டுகள், துப்பாக்கி குண்டுகளிலிருந்து தப்பித்து வரும்  உக்ரைன் மக்களுக்கு போலந்து ஆதரவளிக்கும் என அந்நாட்டின் உள் துறை மந்திரி மாரியுஸ் காமின்ஸ்கி கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.