காவல் நிலையத்திற்கு தனியே சென்று புகார் அளித்த 3-ம் வகுப்பு சிறுவன்!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அணில் என்ற மாணவர் 3-ம் வகுப்பு மாணவர் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், 3-ம் வகுப்பு மாணவர் அணில் தனது ஆசியர்களான சனி, வெங்கட் ஆகியோர் தன்னை அடிப்பதாக மகபூர் மாவட்டம் பயராம் நகர காவல்நிலையத்திற்கு சென்று மாணவர் அணில் போலீசாரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். சிறுவனின் குற்றச்சாட்டை ஏற்ற போலீசார் நேரடியாக பள்ளிக்கு சென்று மாணவர்களை அடிக்கக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த சிறுவனுக்கு போலீசார் அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். டீச்சர்ஸ் என்ன அடிப்பதாக 3-ம் வகுப்பு சிறுவன் காவல் நிலையத்திற்கு தனியே சென்று புகார் அளித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.