விருந்து நிகழ்ச்சியில் தனுஷ் – ஐஸ்வர்யா!!!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

ஆனாலும் தனுஷ் – ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க இரு தரப்பு குடும்பத்தினரும் முயற்சிகளை மேற்கொண்டனர். சினிமா முன்னணி பிரபலங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் எதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
தனுஷ்-ஐஸ்வர்யாவின் நெருங்கிய நண்பர்கள் ஒரு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டனர். ஆனாலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவில்லை, பேசிக்கொள்ளவும் இல்லை. விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் உடனடியாக இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பேசிக்கொள்வார்கள், ஏதாவது சுமூக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்த்து, இதற்காகவே விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதேவேளை சினிமா படப்பிடிப்புகளில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில சிவன் கோவில்களுக்கு தனுஷ் சென்று மனமுருக வழிபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.