உக்ரைனில் சில இடங்களில் ரஷியா தற்காலிகமாக போர் நிறுத்தம்…!
உக்ரைனில் மேலும் சில இடங்களில் ரஷியா தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தி உள்ளது ரஷியா.
மனிதாபிமான அடிப்படையிலும் பொதுமக்கள் பத்திரமாக வெளியேறவும் போர் நிறுத்தம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 12-வது நாளாக எட்டியுள்ள நிலையில் 4 நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.